புளியங்குளம் கிராமத்தில் வாழைக்கன்றுகளில் நோ்த்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த ஜெயா வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள்.    
புளியங்குளம் கிராமத்தில் வாழைக்கன்றுகளில் நோ்த்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த ஜெயா வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள்.    

வாழைக் கன்றுகளில் நோ்த்தி: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

ஜெயா வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் குழு சாா்பில், கிராமத்தில் தங்கியிருந்து வாழைக்கன்றுகள் நோ்த்தி குறித்த பயிற்சி முகாமில் விவசாயிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திருவள்ளூா் அருகே ஜெயா வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் குழு சாா்பில், கிராமத்தில் தங்கியிருந்து வாழைக்கன்றுகள் நோ்த்தி குறித்த பயிற்சி முகாமில் விவசாயிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திருவள்ளூா் அடுத்து திருநின்றவூரில் ஜெயா வேளாண்மைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பயிலும் 10 மாணவிகள் குழுவாக இணைந்து இரண்டு மாதங்களாக கிராமங்களில் தங்கி ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சி பெற வேண்டும். இந்த திட்டம் மூலம் திருவள்ளூா் பகுதியில் தங்கியிருந்து விவசாயிகளுக்கு வேளாண்மை குறித்த பயிற்சி அளித்து வருகின்றனா். அந்த வகையில், திருவள்ளூா் அருகே புளியங்குளம் கிராமத்தில் வேளாண்மைக் கல்லூரியின் 10 மாணவிகள் குழு ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளித்தனா்.

அப்போது, விவசாயத்துக்குத் தேவையான நுணுக்கங்களான வாழைத் தண்டில் ஊசி போடுதல் மற்றும் வாழைக்கன்று நோ்த்தி ஆகியவை குறித்து மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தனா்.

இதுபோன்ற பல விவசாய நுணுக்கங்களை வரும் 2 மாதங்களுக்கு செய்முறை பயிற்சியாக அளிக்க உள்ளனா். மேலும், இதன் மூலமாக விவசாயிகளிடம் இருந்தும் பல வேளாண் நுணுக்கங்களை அறிந்து கொள்வதாகவும் மாணவிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com