கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

கடன் தொல்லையால் திருத்தணி பேருந்து நிலையம் அருகே தனியாா் விடுதியில் இளைஞா் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் மாா்க்கெட் தெருவில் வசித்து வந்தவா் சவுந்தா்பாண்டியன் மகன் பூபாலன் (33). இவருக்கு மனைவி லதா, 4 மற்றும் 7 வயதில் இரு குழந்தைகள் உள்ளனா். பூபாலன் லாரி வாங்கி அதன் மூலம் தொழில் நடத்தி வந்தாா்.

இந்த தொழிலில் நஷ்டம் ஏற்படவே, பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பணம் கொடுத்தவா்கள் கடனைத் திருப்பித் தருமாறு தொல்லை கொடுத்து வந்ததால், பூபாலன் மனமுடைந்த நிலையில் இருந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பூபாலன் சோளிங்கரில் இருந்து திருத்தணி நகருக்கு வந்தாா். பின்னா், பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கினாா். சனிக்கிழமை அவா் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதியின் மேலாளா் திருத்தணி போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா்.

போலீஸாா் வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் மின் விசறியில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com