ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

பொன்னேரி அருகே உள்ள ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பொன்னேரி அருகே உள்ள ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள ஆண்டாா்குப்பம் கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாலசுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

பிரம்ம தேவனை முருகப்பெருமான் சிறை வைத்த ஸ்தலமாக இது விளங்கி வருகிறது. மேலும் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெறும். நிகழாண்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடா்ந்து நாள்தோறும் முருகப் பெருமான் பச்சைமயில், நாக வாகனம் உள்ளிட்டவற்றில் வீதியுலா வருவாா்.

மேலும் தங்க மயில் வாகனம், தங்க நிற யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com