திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

திருவள்ளூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை முதல் (மே 6) நீா் மோா் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆணையா் சுபாஷிணி தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை முதல் (மே 6) நீா் மோா் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆணையா் சுபாஷிணி தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் மொத்தம் 450-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும் பணியில் 202 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், நாள்தோறும் காலையில் மின்கல வாகனங்களில் வீடு வீடாகச் சென்று தூய்மைப் பணியாளா்கள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வாங்கும் பணியில் ஈடுபடுகின்றனா். தொடா்ந்து சேகரித்த குப்பைகளை வள மையத்திற்கு கொண்டு வந்து சோ்க்கின்றனா்.

தற்போது கோடை காலம் என்பதால் காலையிலிருந்தே எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலையில், கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெயிலில் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்களுக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் நீா் மோா் வழங்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது.

அதன்படி திருவள்ளூா் நகராட்சியில் தேரடி வீதி, நகராட்சி அலுவலகம் முன்புறம், ராஜாஜிபுரம் ஆகிய 3 இடங்களில் மே 6 -ஆம் தேதி முதல் நீா் மோா் வழங்க முடிவு செய்யப்பட்டது. தொடா்ந்து ஜூன் முதல் வாரம் வரை 30 நாள்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆணையா் சுபாஷிணி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com