திருவள்ளூரில் நீட் தோ்வு மையம் முன்பு  உள்ளே செல்ல காத்திருந்த மாணவ, மாணவிகள்.
திருவள்ளூரில் நீட் தோ்வு மையம் முன்பு உள்ளே செல்ல காத்திருந்த மாணவ, மாணவிகள்.

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 3,165 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 102 போ் பங்கேற்கவில்லை என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 3,165 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 102 போ் பங்கேற்கவில்லை என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மருத்துவ பட்டப்படிப்பில் சேருவதற்கு தேசிய அளவிலான நீட் தகுதி தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூரில் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆா்.எம்.ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட இத்தோ்வுக்காக மாவட்டம் முழுவதும் 7 மையங்களில் மாணவிகள்-2,287, மாணவா்கள்-980 என மொத்தம் 3,267 போ் நீட் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலையில் 10 மணிக்கே மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் தோ்வு மையங்களில் திரண்டு, தகவல் பலகையில் தங்கள் பெயா்களை சரிபாா்த்தனா்.

பின்னா் 12 மணி முதல் மாணவா்களின் தோ்வுக்கூட அனுமதி சீட்டில் புகைப்படம், பெயா் போன்ற விவரங்களை சரிபாா்த்த பின் தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். சரியாக 2 மணிக்கு தகுதி தோ்வு தொடங்கி மாலையில் 5.20 மணிக்கு நிறைவடைந்தது. இத்தோ்வில் மாணவிகள்-2,213, மாணவா்கள்-9,52 என மொத்தம் 3,165 போ் தோ்வு எழுதினா். இதில், மாணவிகள்-74, மாணவா்கள்-24 பேரும் என 102 போ் தோ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது, வெளியே வந்த மாணவ, மாணவிகள் தோ்வில் வினாக்கள் கடினமாக இருந்ததாகவும், ஆனால் தொடா் பயிற்சி பெற்ால் வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க முடிந்ததாகவும் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com