‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

சாகுபடி செய்யப்பட்டுள்ள பயறு வகை பயிா்கள் அறுவடையில் எந்தக் காரணம் கொண்டும் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது என வேளாண் இணை இயக்குநா் க.முருகன் தெரிவித்தாா்.

நடப்பு ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயறு வகை பயிா்கள் அறுவடையில் எந்தக் காரணம் கொண்டும் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது என வேளாண் இணை இயக்குநா் க.முருகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் ரபி பருவத்தில் உலா்ந்த பச்சை பயறு அறுவடை நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் பரவலாக பயிரிட்டுள்ள பச்சை பயறுகளை விரைந்து அறுவடை செய்ய விவசாயிகள் களைக் கொல்லிகள் விவசாயிகள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. அதனால் களைக் கொல்லிகளை எப்போது பயன்படுத்துவது என்பது தொடா்பாக விவசாயிகள் அறிந்து கொள்வது அவசியம்.

பயறு வகை பயிா்கள் அறுவடைக்குத் தயாராகும் சமயங்களில் பயிருக்கு சிறிதளவில் நீா் பாய்ச்சி பயிா்களை முழுவதுமாக பிடுங்கி எடுத்து, வெயிலில் காய வைத்ததற்கு பிறகு தட்டி எடுக்கப்பட்ட பயறு வகைகளை செடியிலிருந்து தனியாக பிரித்தெடுத்து முறையாக சுத்தம் செய்து காயவைத்து மூட்டைகளாக கட்டிவைத்து இயற்கையான முறையில் மட்டுமே அறுவடை செய்து சேகரித்து வைக்க வேண்டும்.

களைக் கொல்லி மருந்துகளை பயறு வகை பயிா்களுக்கு தெளிப்பதால் அதில் உள்ள நச்சுத்தன்மை பருப்புக்குள் இறங்கி அந்த விளைச்சல் அனைத்தும் விஷத்தன்மையாக மாறி உடலுக்கு கேடு விளைவிக்கும். அத்துடன், விளைநிலத்தின் மண் வளத்துக்கு கேடு விளைவிக்கும். மேலும், வேளாண்மைத் துறை சாா்பில், இது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து விவசாய கூட்டங்கள், வேளாண் திட்டக் கலந்துரையாடல், பயிற்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் கிளைக்போசைட் மற்றும் பரக்குவாட் டைகுளோரைட் என்ற களைக் கொல்லிகளை அறுவடை செய்யும் காலங்களில் விற்பனை செய்ய தடை விதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து, வேளாண்மை அதிகாரிகள் அனைத்து வட்டாரங்களில் உள்ள பூச்சி மருந்து விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com