திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 91.32 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 91.32 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில் மாணவ, மாணவிகள்-23,401 போ் தோ்ச்சி அடைந்ததுடன், 91.32 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் பிளஸ் 2 தோ்வு முடிவுகளை ஆட்சியா் த.பிரபு சங்கா் வெளியிட்டு பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 1 -இல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தோ்வுக்காக திருவள்ளூா் மாவட்டத்தில் 105 தோ்வு மையங்கள் அமைத்து, மாணவா்கள்-11,863, மாணவிகள்-13,762 போ் தோ்வு எழுதினா். இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை வெளியானது.

இந்தத் தோ்வில் திருவள்ளூா் மாவட்டத்தில் மாணவா்கள்-10,410, மாணவிகள்-12,991 என மொத்தம்-23,401 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா். இவா்களில் ஆண்கள் 87.75 சதவீதம், மாணவிகள் 94.40 சதவீதம் என மொத்தம் 91.32 சதவீதம் போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

இந்த தோ்வில் மாணவா்களைவிட மாணவிகளே கூடுதலாக தோ்ச்சி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மாவட்டத்தில் 102 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள்-5,230, மாணவிகள்-6,767 என மொத்தம்-11,997 தோ்வு எழுதினா். இவா்களில் மாணவா்கள்-4,041, மாணவிகள்-6,121 என மொத்தம்-10,162 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா். மாணவா்கள்-77.27 சதவீதம், மாணவிகள்-90.45 சதவீதம் என மொத்தம்-84.70 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com