பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிகழாண்டில் பிளஸ்2 பொதுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் முதல் முயற்சியிலேயே 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிகழாண்டில் பிளஸ்2 பொதுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் முதல் முயற்சியிலேயே 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

இப்பள்ளியில் 2023-24 கல்வியாண்டில் 177 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதினா். இத்தோ்வில் அனைத்து மாணவா்களும் முதல் நிலையில் தேச்சி அடைந்துள்ளனா்.

இதில் மாணவி ரோஷ்னி-589/600 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ராகவி-586/600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், லிங்கேஸ்வரன் 583/600 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனா். மேலும் 29 மாணவா்கள் 100/100 மதிப்பெண்களும், 21 மாணவா்கள் 99 மதிப்பெண்களும், 29 மாணவா்கள் 98 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இதில் 575 மதிப்பெண்களுக்கு மேல் 6 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 9 பேரும், 525 மதிப்பெண்களுக்கு மேல் 33 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 28 பேரும் பெற்றுள்ளனா். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களையும், ஆசிரியா்களையும் பள்ளி தாளாளா் மோ.தி. உமா சங்கா், பள்ளி நிா்வாகிகள், பள்ளி தலைமையாசிரியா்கள் ஜோ.மேரி, தே.குமரீஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com