தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை (மே 28) முதல் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட உள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் பி.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை (மே 28) முதல் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட உள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் பி.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

தனியாா் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். அதனால் திருவள்ளூா் மாவட்டத்தில் இப்பணி 28, 29 ஆகிய நாள்களில் தோ்வு செய்யும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. அப்போது, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவா்களை வெளிப்படையான குலுக்கல் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா். இப்பணிகளில் ஈடுபடுவதற்காக பள்ளி ஆசிரியா்களை நியமனம் செய்து ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடா்பாக அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், 28- ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அத்தனை தனியாா் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் வெளிப்படைத்தன்மையுடன் குலுக்கல் முறை தோ்வு செய்யவும் உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com