பெரணமல்லூரில் குறுகிய சாலை விரிவுபடுத்தப்படுமா?

திருவண்ணாமலை, மார்ச் 3: நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள குறுகிய சாலையை விரிவுபடுத்த

திருவண்ணாமலை, மார்ச் 3: நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள குறுகிய சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

வந்தவாசி வட்டத்தில் உள்ள பெரணமல்லூர் பேரூராட்சியில்  5,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, வட்டார வளர்ச்சி அலுவலகம், சார் பதிவாளர்

அலுவலகம், காவல் நிலையம், வேளாண்மை உள்ளிட்ட முக்கிய அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

ஆரணி, செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து முறையே 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தப் பேரூராட்சி. 1957-இல்

இருந்து தொடர்ந்து சட்டப் பேரவைத் தொகுதியாக இருந்து, தற்போது வந்தவாசியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரணமல்லூருக்கு

சரியான சாலை வசதியும், தெரு விளக்கு வசதியும் முழுமையாக இல்லை. சாலைகள் சரியான முறையில் இருந்தால் முக்கிய நகரங்களில் இருந்து பேருந்துகள்

பெரணமல்லூர் வழியாக வந்து செல்லும். இதனால், வியாபாரம் பெருகி பேரூர் வளர்ச்சி பெறும் என்பது இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாளைய கனவாகும்.

தற்போது சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை முன்வந்துள்ள நிலையில், இதைப் பயன்படுத்திக் கொள்ள இங்கு வசிக்கும் பெரும்பாலானோர்

விருப்பம் தெரிவிக்கின்றனர்.

ஆரணி- வந்தவாசி சாலையில் உள்ள சடத்தாங்கல் கிராமத்தையும், வந்தவாசி- போளூர் சாலையில் உள்ள கோழிப்புலியூர் கிராமத்தையும் இணைக்கும்

நெடுஞ்சாலை

(ஓடிஆர்) பெரணமல்லூர் பேரூராட்சி வழியாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 12 கிலோ மீட்டர்.

இதில், பெரணமல்லூர் பேரூராட்சி எல்லையான சடத்தாங்கல் கிராமத்தில் இருந்து மோசவாடி கிராமம் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு வழிச்

சாலையாகவும்,  மோசவாடியில் இருந்து கோழிப்புலியூர் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழிச் சாலையாகவும் தற்போது சாலை உள்ளது.

குறிப்பாக, சடத்தாங்கலில் இருந்து மோசவாடி வரை 7 மீட்டர் அகலம் கொண்டதாகச் சாலை இருக்க வேண்டும். இதில், பெரணமல்லூர் பேரூராட்சியில் 258

மீட்டர் நீளத்துக்கு போடப்பட்டுள்ள கான்கிரீட் சாலையின் அகலம் வெறும் 4 மீட்டரே உள்ளது. மீதமுள்ள 3 மீட்டர் சாலைக்காக கான்கிரீட் சாலையின் இரு

புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்த 4 மீட்டர் சாலையின் வழியாக எந்த ஒரு கனரக வாகனமோ, பேருந்தோ செல்ல இயலாது. எனவே,

இந்தச் சாலையை விரிவுபடுத்துவது மிகவும் அவசியம்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையின் செய்யாறு கோட்டப் பொறியாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கான்கிரீட் சாலையின் இருபுறமும் உள்ள

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலில், 258 மீட்டர் நீளத்துக்குப் போடப்பட்டுள்ள கான்கிரீட் சாலையை

ஒட்டிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தைக் கண்டறிந்து, அளவீடு செய்து தர வேண்டும் என்று வந்தவாசி வட்டாட்சியருக்கு ஒரு மாதத்துக்கு

முன்னரே கடிதம் அனுப்பி விட்டோம். வருவாய்த் துறையினர் அளவிட்ட பின்னர், ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன், "பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள 258 மீட்டர் நீள குறுகிய சாலையை விரிவுபடுத்த

வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் விரும்புகின்றனர். அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம்

செய்யப்படும்' என்றார்.

இதுகுறித்து பொதுமக்கள் பெரும்பாலானோர் கூறுகையில், சாலை விரிவாக்கத்துக்கும், ஊர் வளர்ச்சிக்கும் நாங்கள் தடையாக இல்லை. அதே நேரத்தில்

பெரும்பாலான கடைகள், வீடுகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதால், மாற்று வழியில் சாலையை அகலப்படுத்த வேண்டும். மேலும், தானாக முன்வந்து

ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்பவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

ஆனால் முடிவு என்னவோ

நெடுஞ்சாலைத் துறையின் கையில்..?

"கான்கிரீட் சாலைக்கு பாதிப்பில்லை'

சடத்தாங்கல் கிராமத்தில் இருந்து மோசவாடி வரையில் உள்ள இருவழிச் சாலையை ரூ. 7 கோடி மதிப்பில் உறுதிப்படுத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பெரணமல்லூர் பேரூராட்சியில் போடப்பட்டுள்ள 258 மீட்டர் நீள கான்கிரீட் சாலை சேர்க்கப்படவில்லை. இந்தச் சாலை தரமாக இருப்பதால்

அதை மேலும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், கான்கிரீட் சாலையின் இருபுறமும் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தைக் கையகப்படுத்தி சாலையை அகலப்படுத்தத்

திட்டமிட்டுள்ளோம் என்கிறார், நெடுஞ்சாலைத் துறையின் செய்யாறு கோட்டப் பொறியாளர் பன்னீர்செல்வம்.

"ஆக்கிரமிப்பு அகற்றம் உறுதி'

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையின் வந்தவாசி உதவி  கோட்ட பொறியாளர் ஜெயசெல்வன் கூறியதாவது:

பெரணமல்லூர் பேரூராட்சியில் பஜார் பகுதியில் 258 மீட்டர் நீளமுள்ள கான்கிரீட் சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடம் வருவாய்த் துறையினரால் அளவீடு செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பேரூராட்சி வழியே செல்லும் 300 மீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இநதப் பணி முடிந்தவுடன் ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறைப்படி முன்னறிவிப்பு வழங்கப்படும். முன்னறிவிப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள்கள் கழித்து,

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவுப்படுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com