ஆரணி ஒன்றியத்தில் 60 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்ட ஆணை: அமைச்சர் வழங்கினார்

ஆரணி ஒன்றியத்தில் 60 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை மாலை வழங்கினார்.

ஆரணி ஒன்றியத்தில் 60 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை மாலை வழங்கினார்.
ஆரணி ஒன்றியத்தைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ், வீடு கட்டுவதற்கான ஆணைகளை சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
உடன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன்,  முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர்,  பாசறை மாவட்டச் செயலர்  ஜி.வி.கஜேந்திரன், நகரப் பொறுப்பாளர் பாரிபாபு, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் ஜெ.சம்பத்,  வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com