வருவாய்த் துறையில் 18 பேருக்கு துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வு

திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் பணிபுரியும் 18 பேருக்கு துணை வட்டாட்சியர்களாகப் பதவி உயர்வு அளித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் பணிபுரியும் 18 பேருக்கு துணை வட்டாட்சியர்களாகப் பதவி உயர்வு அளித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
 பதவி உயர்வு பெற்றவர்களின் புதிய பணியிடம் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளது. அதன்படி, சேத்பட் தேசிய நெடுஞ்சாலை அலகு 5-ன் முதுநிலை வருவாய் ஆய்வாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி (சேத்பட் வட்ட வழங்கல் அலுவலர்), ஆட்சியர் அலுவலகம் பி.பொன்விழி (மாவட்ட வழங்கல் அலுவலகக் கண்காணிப்பாளர்), ஆரணி ஏ.குமரேசன் (ஜமுனாமரத்தூர் தலைமையிடம்), தண்டராம்பட்டு எம்.சரவணன் (மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக கண்காணிப்பாளர்), ஆட்சியர் அலுவலகம் என்.சாரதா (ஆட்சியர் அலுவலக எம் பிரிவு தலைமை உதவியாளர்), செங்கம் என்.லதா (செங்கம் தலைமையிடம்) ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் உள்பட மொத்தம் 18 பேருக்கு துணை வட்டாட்சியர்களாகப் பதவி உயர்வு அளித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். பதவி உயர்வு பெற்றவர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com