தாட்கோ மேம்பாட்டுத் திட்டங்களில் பயன்பெற ஆதிதிராவிடர் சமூகத்தினர் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மேம்பாட்டுத் திட்டங்களில் பயன்பெற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தினர்  விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

தாட்கோ மேம்பாட்டுத் திட்டங்களில் பயன்பெற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தினர்  விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தினரின் நலனுக்கான பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை தாட்கோ நிறைவேற்றி வருகிறது. 
அதன்படி, நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், விரைவான மின் இணைப்புத் திட்டம், பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம்,  இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முட நீக்கு மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி ஆகிய திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.
இதேபோல, சுயஉதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம், மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப் பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி - 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, தொழில் தையல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களும் செயல்
படுத்தப்படுகின்றன.
இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 18 முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும், விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. ஒரு லட்சமாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ, நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்கத் தேவையில்லை.
திருவண்ணாமலை மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் மட்டும் விண்ணப்பதாரர்கள் நேரில் வந்து இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக பயனாளியிடம் இருந்து ரூ.60 வசூல் செய்யப்படும்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி 
தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com