பள்ளி மாணவர்களுக்கு நாளிதழ் வாசிப்புத்திறன் பயிற்சி

ஆரணியில் உள்ள ஆரஞ்சு பிரிட்டிஷ் அகதெமி பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை நாளிதழ் வாசிப்புத்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆரணியில் உள்ள ஆரஞ்சு பிரிட்டிஷ் அகதெமி பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை நாளிதழ் வாசிப்புத்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை பள்ளித் தலைவர் கே.சிவக்குமார் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். பள்ளியில் பயிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் நாளிதழ்களை வாசித்தனர். விழாவில், பள்ளித் தலைவர் கே.சிவக்குமார் பேசியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு நினைவுத்திறன் குறைந்து வருகிறது. நினைவுத்திறனை அதிகரிக்க நாளிதழ்களை படிக்க வேண்டியது 
அவசியம்.
மேலும், பள்ளிப் பாடத்துடன், பொதுஅறிவையும் வளர்த்துக்கொள்ள நாளிதழ்களை படிக்க வேண்டும்.  வரும் மாதாந்திர தேர்வுகளில் நாளிதழ்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, அவற்றுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளன என்றார். விழாவில், பள்ளி துணைத் தலைவர் அபர்ணாசிவக்குமார், பள்ளி முதல்வர்கள் கே.செந்தில்குமார், எம்.பிரபு, துணை முதல்வர்கள் வேளாங்கண்ணன்,  அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com