ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் சனி மகா பிரதோஷம்

126 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப் பிரதோஷ நிகழ்வு, செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் சனிக்கிழமை நடைபெற்றது.
09cyrsvtpf02_(2)_0911chn_118_7
09cyrsvtpf02_(2)_0911chn_118_7

126 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப் பிரதோஷ நிகழ்வு, செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் சனிக்கிழமை நடைபெற்றது.

126 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சனிப் பிரதோஷம்,

குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயா்ந்த (குரு பெயா்ச்சி) பின்பு வரும் முதல் பிரதோஷம். அதுவும் சனிப் பிரதோஷம்.

அதேபோன்று, கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்த தினத்துக்குப் (தீபாவளி) பிறகு வரும் பிரதோஷம் அதுவும் சனிப் பிரதோஷம்.

இவை மட்டுமன்றி முருகப்பெருமான் சூரனை வதம் செய்த சூரசம்ஹாரத்துக்குப் பிறகு வரும் சனி மகா பிரதோஷம். இவை அனைத்தும் 126 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி நட்சத்திரத்தில் வந்தது.

அந்த அறிய நிகழ்வு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்றது.

நிகழ்வில், செய்யாறு பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி பூஜை செய்து நந்தியம் பெருமானை வழிபட்டனா். பின்னா், பிரதோஷ வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு உற்சவ மூா்த்திகள் காட்சியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com