அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

செங்கம் பகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கம் பகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச் சாலை அமைப்பதற்கான திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விவசாயிகளிடம் கருத்து கேட்டு 8 வழிச் சாலை அமைக்கப்படும் என்று கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மீண்டும் 8 வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளதாகக் கூறி, 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விநாயகம் தலைமையில், செங்கத்தை அடுத்த மண்மலை பகுதியில் விவசாயிகள் ஒன்று திரண்டு, தங்களது விவசாய நிலங்களில் கருப்புக் கொடிகளைக் கட்டி, அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய - மாநில அரசுகள் 8 வழிச் சாலைத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, விவசாய நிலங்களைப் பிடுங்கி, சாலை அமைக்க முயற்சிக்கும் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சி வேட்பாளர்களை மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் கடந்த இரு தினங்களாக அவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் செங்கம், மண்மலை, முறையாறு, செ.நாச்சிப்பட்டு ஆகிய பகுதியில் விவசாயிகள், பெண்கள் மற்றும் 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க நிர்வாகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com