திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா
By DIN | Published On : 04th August 2019 12:43 AM | Last Updated : 04th August 2019 12:43 AM | அ+அ அ- |

செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பேறு வேண்டியும் ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் சாற்றி பெண்கள் வழிபடுவது வழக்கம். அதன்படி, செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு 108 யாகம் வளர்க்கப்பட்டு, சுவாமிக்கு 108 சங்காபிஷேகம், அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து ஸ்ரீபாலகுஜாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சுக்கரவாரத்து அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
அப்போது, பெண்கள் அம்மனுக்கு வளையல்களை சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.