ஆரணி பட்டுப் பூங்கா சார்பில் கைத்தறி தின விழா

ஆரணி கைத்தறி பட்டுப் பூங்கா சார்பில், 5-ஆவது தேசிய கைத்தறி தின விழா மற்றும் கைத்தறி நெசவு பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


ஆரணி கைத்தறி பட்டுப் பூங்கா சார்பில், 5-ஆவது தேசிய கைத்தறி தின விழா மற்றும் கைத்தறி நெசவு பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு  பட்டுப் பூங்கா  இயக்குநர் என்.சண்முகம் தலைமை வகித்தார். எச்.ரகுபதிராமசாமி வரவேற்றார். காஞ்சிபுரம்  நெசவாளர் சேவை மைய இணை இயக்குநர் டி.கார்த்திகேயன் பங்கேற்றுப் பேசுகையில், புகைப்படம் எடுக்கப்பட்ட  அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் இன்னும் 2 மாதங்களில் நெசவாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு விடும். 
கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் நெசவு செய்யும் நெசவாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகள், இனி வரும் காலங்களில் தனியாரிடம் நெசவு செய்யும் நெசவாளர்களுக்கும் கிடைக்கும் என்றார்.
திருவண்ணாமலை கைத்தறி, துணிநூல் துறை கைத்தறி அலுவலர் எஸ்.தேவிபத்மஜா, கைத்தறி துறையின் முக்கியத்துவத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் ஆர்.எம்.கே.வி இயக்குநர் என்.மாணிக்கவாசகம், ஆரணியில் திறமையான நெசவுக் கலைஞர்கள் இருப்பதால்தான் ஆரணியில் உற்பத்தி மையத்தை தொடங்குவதற்கு காரணம் என்று குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com