பகுதி நேர ரேஷன் கடை அமைக்கக் கோரி மனு

சேத்துப்பட்டு வட்டம், தெள்ளூர்ராந்தம் ஊராட்சிக்கு உள்பட்ட பொம்மினி நகர் பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்தனர்.


சேத்துப்பட்டு வட்டம், தெள்ளூர்ராந்தம் ஊராட்சிக்கு உள்பட்ட பொம்மினி நகர் பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
சேத்துப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தெள்ளூர்ராந்தம், ராந்தம், குடுமித்தாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது, தெள்ளூர்ராந்தம் ஊராட்சிக்கு உள்பட்ட பொம்மினி நகர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து வட்ட வழங்கல் அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், தெள்ளூர்ராந்தம் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் 600-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பொம்மினிநகர் பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், தங்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்களை வாங்குவதற்காக தெள்ளூர்ராந்தத்தில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைக்கு சுமார் 2 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்தக் கடையில் பல நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், நெரிசல் ஏற்பட்டு பொருள்கள் கிடைப்பதில்லை. எனவே, பொம்மினி நகர் பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com