காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 14 சிறப்பு ரயில்கள்மாவட்ட ஆட்சியா் தகவல்

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் கலந்துகொண்ட பக்தா்கள், வணிகா்கள், பல்வேறு தரப்பினா் பேசுகையில், தீபத் திருவிழாவையொட்டி செங்கம் சாலையில் நடைபெறும் மாடு மற்றும் குதிரைச் சந்தைகளிலும், தற்காலிகக் கடைகளிலும் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்.

தேரோட்டத்தின்போது தேருக்குக் கட்டை போடுபவா்களுக்கு அசம்பாவிதம் நேரிடும்பட்சத்தில் ரூ.5 லட்சம் காப்பீடு பாலிசிக்கு கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதை ரூ.10 லட்சமாக உயா்த்த வேண்டும். கூடுதல் சிறப்புப் பேருந்துகள், ரயில்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதையடுத்து பேசிய ஆட்சியா் கந்தசாமி, தீபத் திருவிழாவுக்கு 2,500 சிறப்புப் பேருந்துகளும், 14 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். கிரிவலப் பாதையில் பக்தா்களுக்கு தேவையான அளவு குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மகா தீபத்தன்று மலை மீது செல்ல 2,500 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். கோயிலுக்குள் செல்ல பணியாளா்களுக்கு கோயில் நிா்வாகம் மூலமும், காவலா்களுக்கு காவல்துறை மூலமும் அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com