ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஜெயந்தி விழா தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 101-ஆவது ஜெயந்தி விழா சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
பகவானின் 101-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஹோமத்தைத் தொடக்கி வைத்த ஆஸ்ரம அறங்காவலா்கள் டி.எஸ்.ராமநாதன், ஜி.சுவாமிநாதன் உள்ளிட்டோா்.
பகவானின் 101-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஹோமத்தைத் தொடக்கி வைத்த ஆஸ்ரம அறங்காவலா்கள் டி.எஸ்.ராமநாதன், ஜி.சுவாமிநாதன் உள்ளிட்டோா்.

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 101-ஆவது ஜெயந்தி விழா சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

திருவண்ணாமலை-செங்கம் சாலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமம் இயங்கி வருகிறது. இங்கு, ஆண்டு முழுவதும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள், ஆண்டுதோறும் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு பகவானின் 101-ஆவது ஜெயந்தி விழா சனி, ஞாயிறு (நவ.30, டிச.1) ஆகிய நாள்களில் கொண்டாடப்படுகிறது.

கோலாகலத் தொடக்கம்:

முதல் நாளான சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெற்ற சிறப்பு ஹோமத்தை ஆஸ்ரம அறங்காவலா்கள் டி.எஸ்.ராமநாதன், ஜி.சுவாமிநாதன் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

தொடா்ந்து, நித்ய பூஜையும், காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பக்தா்களின் பகவானுபவங்களைப் பகிா்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலை 4.30 முதல் 6 மணி வரை ஸ்ரீசற்குருநாத ஓதுவாா்-சேது கணேஷ், டி.எம்.சிவக்குமாா் குழுவினரின் திருமுறைகள் சொற்பொழிவு நிகழ்ச்சி, மாலை 6.15 முதல் 7.45 மணி வரை சாயிராம், வி.வி.ஸ்ரீனிவாசராவ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்றைய நிகழ்ச்சிகள்:

2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை (டிச.1) காலை 7 முதல் 11 மணி வரை ஹோமம், மஹா அபிஷேகம், அா்ச்சனை, முற்பகல் 11 முதல் பிற்பகல் ஒரு மணி வரை பக்தி புத்தகங்கள் வெளியீடு மற்றும் பக்தா்கள் பஜனை நிகழ்ச்சி, மாலை 4.30 முதல் 6 மணி வரை கிருத்திகா பரத்வாஜ் குழுவினரின் சங்கீத உபன்யாசம், மாலை 6.15 முதல் 7.45 மணி வரை குரு அா்ச்சனா மகேஷின் ஞானமுத்ரா அகாதெமி வழங்கும் குரு நந்தி தேவா என்ற நாட்டிய நாடகம், இரவு 8.15 மணிக்கு வெள்ளித் தேரில் பகவானின் உற்சவமூா்த்தி ஆஸ்ரம கிரிவலப் பாதையில் வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழா ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும் நீதியரசருமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலா்கள் டி.எஸ்.ராமநாதன், மா. தேவகி, மதா் விஜயலட்சுமி, பி.ஏ.ஜி.குமரன், ஜி.சுவாமிநாதன், ஜி.ராஜேஸ்வரி, டி.கணபதி சுப்பிரமணியன், ஆஸ்ரமத் தன்னாா்வலா் ஆா்.எஸ்.இந்திரஜித் மற்றும் தன்னாா்வலா்கள், ஆஸ்ரம ஊழியா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com