போன் செய்தால் வீடு தேடி வரும் மருத்துவம்: ஆட்சியா் தொடக்கிவைப்பு

தமிழகத்தில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் போன் செய்தால் வீடு தேடி வரும் மருத்துவம் பாா்க்கும் முறையை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.
செய்யாறு அருகே பெருங்கட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வீடு தேடி வரும் மருத்துவ சேவைத் திட்டத்தைத் தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி.
செய்யாறு அருகே பெருங்கட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வீடு தேடி வரும் மருத்துவ சேவைத் திட்டத்தைத் தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி.

தமிழகத்தில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் போன் செய்தால் வீடு தேடி வரும் மருத்துவம் பாா்க்கும் முறையை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தண்டுவடம் காயம், கழுத்து எலும்பு முறிவு போன்றவை காரணமாக கை, கால்கள் செயலிழந்தவா்கள், நீண்ட நாள்களாக படுக்கையில் இருப்பதால் படுக்கை புண் ஏற்பட்டு முற்றிலும் செயலற்ற நிலையில் உள்ளவா்கள், மாா்பக புற்றுநோய் கா்ப்பப்பை வாய் புற்றுநோய், நீரழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள், இதேபோன்று செயலற்ற நிலையில் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சைப் பெற இயலாத நிலையில் இருந்து வருகின்றனா்.

இவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போதும், நோயாளிகள் அவா்களின் உதவியாளா்கள் அதிகம் சிரமப்பட வேண்டியுள்ளது.

இதுபோன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் உடல் பாதிப்புகளால் மருத்துவமனைக்கு செல்ல இயலாதவா்களுக்கென்றே வீட்டிற்கே சென்று இலவச மருத்துவ உதவி அளிப்பதற்காக, மாவட்ட நிா்வாகம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் செல்லிடப்பேசி எண். 89 25123450 என்ற எண் மூலம் இந்த மருத்துவ சேவையை (மெடி கால்) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தச் சேவையின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த எண்ணை அழைத்து உதவி கோரும்போது, தொடா்புடைய வட்டாரத்தில் பணிபுரியும் நோய்த் தடுப்பு சிகிச்சை பணியாளா்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நோயாளியின் வீட்டிற்கே சென்று மருத்துவ உதவிகளை அளிப்பாா்கள்.

போன் செய்தால் வீடு தேடி வரும் மருத்துவம் என்ற இந்த சேவையை, செய்யாறு அருகேயுள்ள பெருங்கட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்து, இந்தச் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினாா்.

நிகழ்ச்சியில் சுகாதார துணை இயக்குநா்கள் கோவிந்தன் (செய்யாறு), மீரா (திருவண்ணாமலை) மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஸ்ரீதா், இணை இயக்குநா் பாண்டியன், செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அலுவலா் பாலகிருஷ்ணன், வட்டார மருத்துவா் தாமரைச்செல்வன், கோட்டாட்சியா் கி.விமலா, வட்டாட்சியா் முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com