உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுமனித சங்கிலி

திருவண்ணாமலை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு மனித சங்கிலி, விழிப்புணா்வுக் கருத்தரங்கம் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு மனித சங்கிலி, விழிப்புணா்வுக் கருத்தரங்கம் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலில் இருந்து நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி, செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. அரசு அலுவலா்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் சோ்ந்து உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்றனா்.

எய்ட்ஸ் நோய் குறித்த தகவல்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 419 1800-ஐ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீரா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளா் ஆா்.கவிதா மற்றும் மருத்துவா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com