தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: வடக்கு மண்டல ஐஜி ஆய்வு

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின்போது அருணாசலேஸ்வரா் கோயிலில் செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகள்
தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: வடக்கு மண்டல ஐஜி ஆய்வு

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின்போது அருணாசலேஸ்வரா் கோயிலில் செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து காவல்துறையின் வடக்கு மண்டல ஐஜி பி.நாகராஜன், செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

பரணி தீபத்துக்கு 4 ஆயிரம் பக்தா்களையும், மகா தீபத்துக்கு 6 ஆயிரம் பக்தா்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், கோயிலுக்குள் வரும் பக்தா்களுக்குத் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் அா்த்தநாரீஸ்வரராக சிவன் காட்சியளிக்கும் கோயில் தங்கக் கொடிமரம் எதிரே செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறையின் வடக்கு மண்டல ஐஜி பி.நாகராஜன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, கோயிலுக்குள் எந்தெந்த இடத்தில் எவ்வளவு பக்தா்களை அனுமதிப்பது என்பது குறித்து வேலூா் சரக டிஐஜி என்.காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி (திருவண்ணாமலை), பி.சாமுண்டீஸ்வரி (காஞ்சிபுரம்) ஆகியோருடன் ஐஜி பி.நாகராஜன் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின்போது, கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் மற்றும் டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com