திருக்குறள் படித்தல், யோகாவில் அரசுப் பள்ளி மாணவர்கள் உலக சாதனை

உலகிலேயே அதிக நபர்கள் இணைந்து திருக்குறள் படிக்கும் சாதனையை வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப்


உலகிலேயே அதிக நபர்கள் இணைந்து திருக்குறள் படிக்கும் சாதனையை வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும், அதிக நபர்கள் இணைந்து மேஜை மீது யோகாசனம் செய்யும் சாதனையை வந்தவாசியை அடுத்த மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளும் சனிக்கிழமை நிகழ்த்தினர்.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சார்பில், உலக சாதனை திருவிழா - 2019 என்ற தலைப்பில் இந்த உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதையொட்டி, வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தரையில் வரிசையாக அமர்ந்த அந்தப் பள்ளியைச் சேர்ந்த 1500 மாணவிகள் ஒரே நேரத்தில் திருக்குறளை படிக்கத் தொடங்கினர். மொத்தம் 200 திருக்குறள்களை அவர்கள் 13 நிமிடங்களில் ஒருசேர படித்து முடித்தனர். தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை பதிவு நிறுவனத்தினர் இந்தச் சாதனையை பதிவு செய்தனர்.
யோகாசனம்: வந்தவாசியை அடுத்த மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அந்த பள்ளியைச் சேர்ந்த 346 மாணவ, மாணவிகள் மேஜைகளின் மீது யோகாசனம் செய்யும் சாதனையில் ஈடுபட்டனர். 30 நிமிடங்கள் தொடர்ந்து பல்வேறு யோகாசனப் பயிற்சிகள் செய்து அவர்கள் உலக சாதனையை நிகழ்த்தினர். எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை பதிவு நிறுவனத்தினர் இந்த சாதனையை பதிவு செய்தனர். செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலர் பு.நடராசன், ஆரணி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் பாபு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பத்மாவதி(வந்தவாசி), ஆ.இரவிச்சந்திரன் (மழையூர்) மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com