அருணாசலேஸ்வரர் கோயிலில் நந்திகளுக்கு சிறப்பு அலங்காரம்

மாட்டுப் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின்

மாட்டுப் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நந்திகளுக்கு புதன்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மாட்டுப் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் பசுக்கள், காளைகள், கன்றுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பலூன் கட்டி, சிறப்பு பூஜைகள் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோயிலில்...: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கிளிகோபுரம் எதிரே உள்ள சிறிய நந்தி, 
தங்கக் கொடிமரம் எதிரே உள்ள பிரதோஷ நந்தி, சரவிளக்கு அருகே உள்ள நந்தி, சுவாமி சந்நிதி எதிரே உள்ள அதிகார நந்தி உள்ளிட்ட நந்திகளுக்கு புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர், திராட்சை, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், கத்தரி, முள்ளங்கி, பீட்ரூட், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள், அதிரசம், முருக்கு, வடை மற்றும் இனிப்புகளாலான சிறப்பு அலங்காரத்தில் நந்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தன.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்திகளை புதன்கிழமை அதிகாலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
மற்ற கோயில்களில்...: ஆரணி கைலாயநாதர் கோயில், புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் நந்திகளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. 
மேலும், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, தானிப்பாடி, கலசப்பாக்கம் உள்பட மாவட்டத்தின் மற்ற சிவன் கோயில்களில் அமைந்துள்ள நந்திகளுக்கும் புதன்கிழமை காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.  இந்தக் கோயில்களில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com