ரூ.3.27 கோடியில் நாக நதியில் தடுப்பணைப் பணி: அமைச்சர் ஆய்வு

ஆரணி அருகே நாக நதியில் ரூ.3.27 கோடியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

ஆரணி அருகே நாக நதியில் ரூ.3.27 கோடியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
 ஆரணியை அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தின் வழியாகச் செல்லும் நாக நதியில் தடுப்பணை கட்டித் தருமாறு கிராம மக்கள், விவசாயிகள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர், அதனை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார்.
 அதன்பேரில், முதல்வரின் ஆணைக்கினங்க அம்மாபாளையம் கிராமத்தில் ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணி முடிந்து அணை திறக்கப்பட உள்ளது.
 இந்த நிலையில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அணையில் பணிகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
 ஆய்வின்போது, அரசு வழக்குரைஞர் க.சங்கர், ஒன்றியச் செயலர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன். பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பா.திருமால், கண்ணமங்கலம் குமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் முரளிதரன், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 இந்தத் தடுப்பணை 40 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் உயரமும் கொண்டது. அணைக்கட்டின் இருபுறமும் மொத்தம் 4 மணற்போக்கிகளைக் கொண்டது. மேலும், தலைப்பு மதகு மூலம் இந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு நாக நதியின் இரு பகுதிகளிலும் உள்ள 3 கிராமங்கள் மற்றும் மேல்நகர் ஏரியின் மூலமாக 549.316 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற வழிவகை செய்கிறது.
 மேல்நகர் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 97 ஆழ்துளைக் கிணறுகள் இந்த அணையால் பயன் பெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com