நடுப்பட்டு தனி ஊராட்சி அமைக்க நாளை கருத்துக்கேட்புக் கூட்டம் 

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நடுப்பட்டு கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி அமைப்பது தொடர்பாக பொதுமக்களின்

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நடுப்பட்டு கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைக் கேட்கும் 2-ஆவது அமர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வருவாய்க் கோட்டம், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோனையூர் ஊராட்சியைச் சேர்ந்த நடுப்பட்டு குக்கிராமத்தின் முதல் வார்டு மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விண்ணமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த நடுப்பட்டு குக்கிராமத்தின் 3, 9-ஆவது வார்டுகள், 4-ஆவது வார்டின் ஒரு பகுதியை (நடுப்பட்டு கிராமம்) இணைத்து தனி ஊராட்சியை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைக் கேட்கும் இரண்டாவது அமர்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
 இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை நேரடியாகவோ, மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com