கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் தர்னா

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி நிர்வாகிகள் சனிக்கிழமை மாலை நேர தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் சி.அ.முருகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ச.டேவிட்ராஜன், சி.ராமகிருஷ்ணன், சி.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் அ.அந்தோணிராஜ் வரவேற்றார். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிதிக் காப்பாளர் ச.மோசஸ், ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் க.கஜேந்திரன், மாநில துணைத் தலைவர் பெ.அலோசியஸ் துரைராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
போராட்டத்தில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியம் ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் இடமாற்றம் செய்ததை ரத்து செய்ய 
வேண்டும். மாற்றுத் திறனாளி ஆசிரியர்களும் பணிநிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்படுவதை ரத்து செய்ய வேண்டும். 17-பி தண்டனை பெற்ற ஆசிரியர்களின் நிராகரிக்கப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களை மீண்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com