மக்கள் குறைதீர் கூட்டத்தில்  673 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 673 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 673 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, முதியோர், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதிச் சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 673 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும் விரைவைக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட 
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நலத் திட்ட உதவிகள் வழங்கல்: கூட்டத்தில், சமூக பாதுகாப்புத்துறை, உழவர் பாதுபாப்புத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகியவை சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். 
மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் வில்சன் ராஐசேகர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, மகளிர் திட்ட இயக்குநர் ஜெ.சந்திரா உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com