தீ, உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி 

திருவண்ணாமலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை தீ மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவண்ணாமலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை தீ மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
 கோடை காலத்தை முன்னிட்டு விபத்துகள் அதிகம் நிகழ்வதால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என தீயணைப்புத் துறை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.
 அதன் பேரில், தமிழகம் முழுவதும் தீ மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை தீ மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈசான்ய மைதானத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து தொடக்கிவைத்தார். தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் த.குமார் தலைமை வகித்தார். பேரணி அண்ணா நுழைவு வாயில், வேலூர் சாலை வழியாக வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு மாணவ, மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தீயணைப்பு குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் முருகன், நிலைய அலுவலர்கள் அலெக்ஸாண்டர், செல்வமணி, விஸ்வநாதன், மணிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com