குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் சார்பில்,  திருவண்ணாமலையில் நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின  பேரணிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் கோகிலா மற்றும் தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வட்டாட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை வழியாக திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தது. அங்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. 
மேலும் குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து மீட்கப்பட்ட 5 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.6 ஆயிரம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் 245 மாணவர்களுக்கு நோட்டு, பாடப்புத்தகம் உள்ளிட்டவற்றை ஆட்சியர் வழங்கினார்.
போளூர்
கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வட்டாரத் தலைமை மருத்துவர் மணிகண்டபிரபு தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
செய்யாறு
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் குழந்தைத்  தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
முனைவர் ச.துரைராஜ் தலைமையில், கணிதவியல் துறைத் தலைவர் சு.ஜெயக்குமார் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com