திருவண்ணாமலையில் இன்று புத்தகக் கண்காட்சி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை,  தமிழ்நாடு புத்தகம் விற்பனையாளர் சங்கம், இளந்தளிர் அமைப்பு இணைந்து

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை,  தமிழ்நாடு புத்தகம் விற்பனையாளர் சங்கம், இளந்தளிர் அமைப்பு இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி திருவண்ணாமலை சன்னதியில் உள்ள ஸ்ரீ கணேஷ் மகாலில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
புத்தகக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தொடக்கிவைக்கிறார். மாவட்ட நூலக அலுவலர் வள்ளி முன்னிலை வகிக்கிறார். முதல் விற்பனையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தொடக்கிவைக்கிறார். ஐ.டி.பி.ஐ. வங்கி பொதுமேலாளர் வெங்கடசுப்பிரமணியன் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார். 
வெள்ளிக்கிழமை (ஜூன்14) தொடங்கி 23-ஆம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 20 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. பல்வேறு தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
10% தள்ளுபடி மேலும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்குடன் புத்தகம் வாங்கும் அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அறிய வாய்ப்பை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புத்தக விற்பனையாளர் சங்கத் தலைவர் ரவிவர்மா சரவணன், பொருளாளர் கார்த்திக் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com