பள்ளியில் பழங்காலப் பொருள்கள் கண்காட்சி

செய்யாறை அடுத்த குண்ணத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பழங்காலப் பொருள்கள், நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.

செய்யாறை அடுத்த குண்ணத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பழங்காலப் பொருள்கள், நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.
 பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில், அண்மையில் நடைபெற்ற கண்காட்சிக்கு தலைமை ஆசிரியர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆசிரியர் அருள் வரவேற்றார்.
 இந்தக் கண்காட்சியில் பழங்காலப் பொருள்களான சிக்கிமுக்கி கல், கத்தி, பூஜை வழிபாட்டுப் பொருள்கள், அன்றாட வாழ்வியல் பொருள்கள், பழங்காலத்து காலாணா, அரையணா, ஓர் அணா, இரண்டு அணா, நவீன ஒரு பைசா முதல் ரூ.500 வரையிலான நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை வகைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
 கண்காட்சியை பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், வரலாற்று ஆசிரியருமான கை.செல்வகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com