புத்தக வெளியீட்டு விழா

வேட்டவலம் வள்ளலார் திருச்சபையில் சிறப்புப் பட்டிமன்றமும், புத்தக வெளியீட்டு விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

வேட்டவலம் வள்ளலார் திருச்சபையில் சிறப்புப் பட்டிமன்றமும், புத்தக வெளியீட்டு விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு வள்ளலார் திருச்சபை நிறுவனர் தலைவர் ந.சுப்பிரமணிய பாரதியார் தலைமை வகித்தார். 
தொடர்ந்து, திரையிசைப் பாடல்கள் மூலம் தமிழ் வளர்த்த சான்றோர் கவியரசு கண்ணதாசனா..?, பாவரசர் வாலியா..? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. 
கண்ணதாசனே என்ற அணியில் கவிஞர்கள் லதா பிரபுலிங்கம், உமாதேவி பலராமன், ஆ.பாக்கியலட்சுமி ஆகியோரும், வாலியே என்ற அணியில் ஆசிரியை தேவிகா ராணி, சு.பச்சையம்மாள், கல்யாணி நடராசன் ஆகியோரும் வாதிட்டனர்.
நடுவர் பொறுப்பேற்ற எழுத்தாளர் ந.சண்முகம் திரையிசைப் பாடல்கள் மூலம் தமிழ் வளர்த்த சான்றோர் கண்ணதாசனே என்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, ஆய்வறிஞர் பி.கோ.கோவிந்தராசன் எழுதிய 'இருக்க... இரு' என்ற நூலை சுப்பிரமணிய பாரதியார் வெளியிட, தங்க விஸ்வநாதன், பி.புருஷோத்தமன், சுகந்தி பரியதர்ஷினி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக, அருட்பா ஜெ.சீனுவாசன் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. விழாவில், சன்மார்க்க அன்பர் சரவணன் மற்றும்  ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com