வேட்பு மனு தாக்கல்: தேர்தல் ஆணைய நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற உத்தரவு

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்போது

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்போது, வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணைய நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) முதல் வரும் 26-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். காலை 11 மணிக்கு முன்பும், மாலை 3 மணிக்குப் பிறகும் வரப்பெறும் வேட்பு மனுக்கள் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமியிடமும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பொ.ரத்தினசாமியிடமும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்போது தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளை அரசியல் கட்சிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் முந்தைய நாளில் இருந்து மட்டுமே தேர்தல் செலவினத்துக்கான புதிய வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு விவரம் ஏற்கப்படமாட்டாது. அனைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்களில் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கலாம்.
வங்கிக் கணக்கு வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் அவரது தேர்தல் முகவரைக் கொண்ட கூட்டு வங்கிக் கணக்காவோ தொடங்கலாம். வேட்பாளர் அவரது குடும்ப உறுப்பினர்களை கூட்டாக கொண்டு வங்கி கணக்கு தொடங்கக் கூடாது. வங்கிக் கணக்கு விவரத்தை வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அளிக்க வேண்டும். வேட்பு மனுவுடன் வேட்பாளர் சம்பந்தப்பட்ட ஊர்ழ்ம் 26 இழ்ண்ம்ண்ய்ஹப்ண்க்ஷ்ஹற்ண்ர்ய் அச்ச்ண்க்ஹஸ்ண்ற் ஒன்றினை நோட்டரி பப்ளிக் சான்றுடன் தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரம். இந்தத் தொகையை ரொக்கமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செலுத்த வேண்டும். காசோலை, வரைவோலை ஏற்கப்பட மாட்டாது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய டெபாசிட் தொகை ரூ.12 ஆயிரத்து 500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் அசல் சாதிச் சான்றிதழை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர்  எல்லைக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com