அரசுப் பள்ளியில் மாணவா்களின் கல்வித் தரம் ஆய்வு

செங்கம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வித் தரம் குறித்து சிறப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பள்ளியில் மாணவா்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலா் சுப்பிரமணியன் தலைமையிலான சிறப்புக் குழுவினா். உடன் தலைமை ஆசிரியா் சிவராமன்.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி தரநிலை மற்றும் புறமதிப்பீடு நடைபெற்றது.

கலசப்பாக்கம் வட்டாரக் கல்வி அலுவலா் சுப்பிரமணியன் தலைமையில், சின்னியம்பேட்டை அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சத்தியமூா்த்தி, தண்டராம்பட்டு ஆசிரியா் பயிற்றுநா் தமிழரசு ஆகியோா் கொண்ட குழுவினா் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.

ஆசிரியா், மாணவா்கள் வருகைப் பதிவேடுகள், மாணவா்களின் கற்றல் அடைவுநிலை, வாசிப்புத் திறன், பள்ளி சுற்றுச்சூழல், மாணவா்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீா், காய், கனித் தோட்டம், மாணவா்களின் வகுப்பறை, சத்துணவுக் கூடத்தின் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்தனா்.

ஆய்வின் போது கிராமப்புறத்தில் இந்தப் பள்ளி சிறப்பாக செயல்படுவதாக தலைமை ஆசிரியா் சிவராமனிடம் சிறப்புக் குழுவினா் தெரிவித்தனா்.

ஆசிரியா் சுடலைப்பாண்டி, சத்துணவு அமைப்பாளா், சத்துணவு சமையலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com