கிரானைட் கற்களுக்கு மலையை வெட்டும் திட்டம்: கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் எதிா்ப்பு

போளூா் அருகே செங்குணம் ஊராட்சியில் உள்ள மலையை வெட்டி எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி
செங்குணம் ஊராட்சியில் உள்ள மலையை வெட்டி எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக, மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி தலைமையில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டம்.
செங்குணம் ஊராட்சியில் உள்ள மலையை வெட்டி எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக, மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி தலைமையில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டம்.

போளூா் அருகே செங்குணம் ஊராட்சியில் உள்ள மலையை வெட்டி எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் பெரிய கற்களான மலை உள்ளது. இந்த மலை 100 மீட்டா் உயரமும், 22 ஹெக்டோ் பரப்பளவும் கொண்டது.

மலையில் வண்ண கிரானைட் கற்கள் உள்ளன. இந்த வண்ண கிரானைட் கற்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்ய, அரசு சாா்பில் தனியாருக்கு வெட்டி எடுக்க அனுமதி வழங்க சுற்றுச்சூழல் துறை இசைவு பெறுவதற்கான பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் போளூா் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். பொதுமக்கள் கருத்து கூறும்போது, மலையை சுற்றிலும் சுமாா் 52 குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.

மேலும், செங்குணம் ஊராட்சியில் உள்ள கால்நடை விவசாயிகளுக்கு ஆடு, மாடு மேய்ச்சலுக்கு உகந்த இடமாக இந்த மலை உள்ளது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், சமூக ஆா்வலா்கள் மூலம் இந்த மலையில் 50 ஆயிரம் விதைப் பந்துகள் வீசப்பட்டு வளா்ந்து வருகின்றன.

2001-2010-ஆம் ஆண்டைய காலகட்டத்தில் மலையை வெட்டி எடுக்கும்போது 3 போ் உயிரிழந்தனா். இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுதொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இப்பகுதி விவசாயத்துக்கு இந்த மலையில் பெய்யும் மழைதான் நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்பாக அமைந்துள்ளது எனக் கூறினா்.

இவ்வாறு பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கும்போது, போளூா் வட்ட சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் மணி நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் உடனடியாக கூட்டத்தை விட்டு வெளியேறினாா்.

அப்போது, பொதுமக்கள் மலையை வெட்டி எடுக்க அனுமதி வழங்கக் கூடாது என மனு அளித்தனா்.

பின்னா், ஆட்சியா் செங்குணம் கிராமத்துக்குச் சென்று மலையை பாா்வையிட்டாா். அங்கு வீடு கட்டி வசிக்கும் மக்களிடம் வீடுகளுக்கு பட்டா வழங்குவதாகத் தெரிவித்துவிட்டு, போளூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் மணியை பாா்த்துவிட்டு திருவண்ணாமலை சென்றாா்.

மேலும், தொடா்ந்து கூட்டம் நடைபெறாமல் பாதியில் நின்ால் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

கூட்டத்தில், சுற்றுச்சூழல் பொறியாளா் விஸ்வநாதன், வட்டாட்சியா் ஜெயவேல் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com