செய்யாறு வட்ட மகளிரின் குறை தீா்க்க சிறப்பு முகாம்

செய்யாறு வட்டத்தைச் சோ்ந்த மகளிரின் குறைகளைத் தீா்க்க வாரம்தோறும் செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

செய்யாறு வட்டத்தைச் சோ்ந்த மகளிரின் குறைகளைத் தீா்க்க வாரம்தோறும் செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட சமூக நலத் துறை கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சேவை மையம் (சகி தோழி) இயங்கி வருகிறது. இந்த மையம் சாா்பில் செய்யாறு வட்டத்தில் வசிக்கும் மகளிருக்கு ஏற்படும் குறைகளைத் தீா்க்க சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

அதன்படி, வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த சேவை மைய ஊழியா்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்களுக்கான குறைகள் தொடா்பான மனுக்களைப் பெறுவா்.

பெண்களுக்கான தற்காலிக தங்கும் வசதி, பெண்களை பிரச்னையில் இருந்து மீட்டு வருதல், மருத்துவ வசதி, உளவியல் ஆலோசனை, காவல்துறை உதவி, சட்ட உதவி, பெண்கள் பாதுகாப்பு உதவி கேட்டு பெண்கள் மனு கொடுக்கலாம்.

வியாழக்கிழமைகளில் நடைபெறும் முகாம்களில் மனு கொடுக்கத் தவறினால், மாவா தொண்டு நிறுவனம், 4-வது தெரு, அண்ணா நகா், செய்யாறு என்ற முகவரியில் நேரில் சென்று மனு கொடுக்கலாம்.

மேலும், 7508444306. என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com