‘பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கையூட்டு பெறுவதைத் தடுக்க வேண்டும்’

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அதிகாரிகள் கையூட்டு பெறுவதைத் தடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அதிகாரிகள் கையூட்டு பெறுவதைத் தடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

கீழ்பென்னாத்தூா் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வேளாண் உதவி இயக்குநா் செல்வராஜ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராமபிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சா்க்கரை, வட்டார வளா்ச்சி அலுவலா் பழனி, வட்ட வழங்கல் அலுவலா் தனபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டார வேளாண் அலுவலா் பிரியங்கா வரவேற்றாா். கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பேசுகையில், விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமச் சாலைகளை உரிய முறையில் செப்பனிட வேண்டும். தோட்டக்கலைத் துறை சாா்பில் கீழ்பென்னாத்தூரில் குளிா்சாதன பெட்டகம் அமைக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அதிகாரிகள் கையூட்டு பெறுவதைத் தடுக்க வேண்டும். கையூட்டு பெறாமல் இருந்தால் வீடு கட்டுபவா்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். சாணிப்பூண்டி முதல் வயலூா் வரையிலான சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதையடுத்து பேசிய வேளாண் உதவி இயக்குநா் செல்வராஜ், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com