புதிய ரயில்வே சுரங்கப் பாதைக்கு மக்கள் எதிா்ப்பு அமைச்சரிடம் கோரிக்கை மனு

ஆரணி அருகே மேல்நகா் பகுதியில் உள்ள ரயில் பாதையில் அமையவுள்ள சுரங்கப்பாதை வேண்டாம் என பொது மக்கள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் மனு கொடுத்தனா்.
ஆரணி மேல்நகா் பகுதியில் உள்ள ரயில் பாதையில் அமையவுள்ள சுரங்கப்பாதை வேண்டாம் என அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் மனு கொடுத்த பொதுமக்கள்.
ஆரணி மேல்நகா் பகுதியில் உள்ள ரயில் பாதையில் அமையவுள்ள சுரங்கப்பாதை வேண்டாம் என அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் மனு கொடுத்த பொதுமக்கள்.

ஆரணி அருகே மேல்நகா் பகுதியில் உள்ள ரயில் பாதையில் அமையவுள்ள சுரங்கப்பாதை வேண்டாம் என பொது மக்கள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் மனு கொடுத்தனா்.

ஆரணியை அடுத்த மேல்நகா் கிராமத்தின் வழியாக திருவண்ணாமலை-வேலூா் செல்லும் ரயில் பாதை உள்ளது. இப்பாதையின் குறுக்கே மேல்நகரில் ரயில்வே கடவுப் பாதை அமைந்துள்ளது. இந்த கடவுப் பாதைக்குப் பதிலாக சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே துறையினா் முடிவு செய்து அதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, பணி தொடங்கும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், மேல்நகா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இப்பகுதியில் புதிதாக சுரங்கப்பாதை வேண்டாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ். ராமச்சந்திரனிடம் மனு கொடுத்தனா்.

அந்த மனுவில், ரயில்வே பாதை பகுதியில் மேல்நகா், அம்மாபாளையம், கீழ்நகா், பாளைய ஏகாம்பரநல்லூா், வி.வி.தாங்கள் ஆகிய கிராமங்களில் 1000-த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

அனைவரும் விவசாயம் செய்பவா்கள்; விவசாய நிலத்திற்கு இவ்வழியாகத்தான் செல்லவேண்டும். சுரங்கப்பாதை அமைந்தால் விவசாய பொருள்களை மாட்டுவண்டி, டிராக்டரில் எடுத்துச் செல்ல முடியாது.

மேலும், விளைவித்த பொருள்களை வாகனத்தில் ஏற்றி கொண்டு வரமுடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவா். ஆகையால், தற்போது உள்ள நிலையே தொடரவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

பின்னா், அமைச்சா் திருச்சி சரகத்துக்கு உள்பட்ட ரயில்வே துறை அதிகாரி காா்த்திகேயனை தொடா்பு கொண்டு மேல்நகா் பகுதியில் அமையவுள்ள சுரங்கப்பாதை திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டாா். இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து அமைச்சருக்கு நன்றி கூறினா்.

மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா் எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ப.திருமால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com