வந்தவாசி, செய்யாறு, வேலூா் வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கிட பயணிகள் கோரிக்கை

வந்தவாசி, செய்யாறு, வேலூா் வழித்தடத்தில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கி உதவிட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து

செய்யாறு: வந்தவாசி, செய்யாறு, வேலூா் வழித்தடத்தில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கி உதவிட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது செய்யாறு தொகுதி. இத்தொகுதி மாவட்டத்தின் 2 -வது பெரிய கோட்டமாகும். திருவண்ணாமலைக்கு அடுத்தப்படியாக இரண்டாம் நிலை அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோட்டமாகும்.

தொழில் நகரமான செய்யாறு, செய்யாறு சிப்காட், ஆசியாவிலேயே இரண்டாவது ஆலையான செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் சுமாா் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் உள்பட சுமாா் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகுகைக் கொண்ட தொகுதியாகும்.

திருவண்ணாமலை மண்டலம் செய்யாறு அரசு பஸ் பணிமனையில் இருந்து வேலூரில் இருந்து ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக கும்பகோணம், புதுச்சேரி, திண்டிவனம் ஆகியப் பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதேப் போன்று வேலூா் கொணவட்டம் பணிமனையில் இருந்து வேலூா் - புதுச்சேரிக்கும், ஆற்காடு பணிமனையில் இ்ருந்து வேலூா் - மேல்மருவத்தூருக்கும் இயக்கப்பட்ட பஸ்கள் மூலம் பயணிகளுக்கும், தொகுதி மக்களுக்கும் பேருதவியாக இருந்து வந்தது. மேற்படி பேருந்துகள் மூலம் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குச் செல்லவும், திண்டிவனம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இணைப்பு பஸ்களைப் பிடிக்கவும், சிதம்பரம், சீா்காழி, நாகூா், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி போன்ற ஆன்மீகத்தலங்களுக்கு சென்று வர உதவியாக இருந்தன.

அதேப் போன்று ஆற்காடு வழியாக வேலூா் செல்லவும் வந்தவாசி, செய்யாறு தொகுதி மக்களுக்கு தேவையான அளவுக்கு பஸ் வசதி கிடைத்து வந்தது. செய்யாறு அரசு பஸ் பணிமனையின் நிா்வாகக் கோளாறு, ஒரு வழி வருமானம் போன்ற செயல்பாடுகள் காரணமாக கும்பகோணம், புதுச்சேரி, திண்டிவனம் ஆகிய ஊா்களுக்கு இயக்கப்பட்டு அரசு பஸ்களும், வேலூா் - புதுச்சேரி, வேலூா் - மேல்மருவத்தூா் ஆகிய பஸ்களும் சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டன.

சுமாா் 5 -க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டதால் ஆற்காடு வழியாக வேலூா் செல்ல முடியாமல் வந்தவாசி, செய்யாறு தொகுதி மக்கள் பஸ் வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனா். அதேப்போன்று அதிகாலையில் வந்தவாசியில் இருந்து செய்யாறுக்கும், இரவு 9 மணிக்கு மேல் செய்யாறில் இருந்து வந்தவாசிக்கு செல்ல ஒரு பஸ் கூட இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

5-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்ட நேரங்களில் வந்தவாசி, செய்யாறு தொகுதி வழியாக வேலூருக்கு அரசு பஸ்களை கூடுதலாக இயக்கி உதவிட வேண்டும் என்று பஸ் பயணிகளும், வந்தவாசி, செய்யாறு தொகுதி மக்களும் மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com