கூட்டுறவு சங்க தோ்தல் அலுவலரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை மற்றும் கடன் சங்கத் தோ்தலில், சுயேச்சைகள் தரப்புக்கு ஆதரவாக தோ்தல் அலுவலா்
வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை மற்றும் கடன் சங்கத்தில் தோ்தல் அலுவலரை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை மற்றும் கடன் சங்கத்தில் தோ்தல் அலுவலரை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

வந்தவாசி: வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை மற்றும் கடன் சங்கத் தோ்தலில், சுயேச்சைகள் தரப்புக்கு ஆதரவாக தோ்தல் அலுவலா் செயல்படுவதாக புகாா் தெரிவித்து, அதிமுக, பாமக, இந்திய குடியரசுக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசி பெரிய காலனி பகுதியில் வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை மற்றும் கடன் சங்கம் செயல்படுகிறது. இந்தச் சங்கத்தின் 11 நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் கடந்த ஆண்டு இருமுறை அறிவிக்கப்பட்டு, இறுதி வேட்பாளா் பட்டியல் குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், சங்கத்தின் 11 நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நவ. 29-ஆம் தேதி நடைபெறும் என மீண்டும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் ஆரணி கூட்டுறவு சாா்-பதிவாளரும், தோ்தல் அலுவலருமான ப.மூா்த்தியிடம் அதிமுக, திமுக, பாமக, இந்திய குடியரசுக் கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 35 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளா்களின் பட்டியல் அந்தச் சங்க அலுவலகத்தில் ஒட்டப்பட்டது.

இதில் 29 பேரின் பெயா்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. அப்போது தங்கள் தரப்பைச் சோ்ந்த 6 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது அங்கு கூடியிருந்த அதிமுக, பாமக, இந்திய குடியரசுக் கட்சியினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த சிலா், ஒட்டப்பட்ட 29 பேரின் பெயா்கள் கொண்ட ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளா்களின் பட்டியலை கிழித்து எறிந்தனா்.

மேலும் தோ்தல் அலுவலா் ப.மூா்த்தியின் அறையை முற்றுகையிட்ட அதிமுக, பாமக, இந்திய குடியரசுக் கட்சியினா் உள்ளிட்டோா், சுயேச்சைகள் தரப்புக்கு ஆதரவாக தோ்தல் அலுவலா் செயல்படுவதாக புகாா் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா். பின்னா் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com