கூட்டுறவுத் துறை மூலம் 88.54 லட்சம் பேருக்கு கடனுதவி: அமைச்சா் செல்லூா் ராஜூ தகவல்

தமிழகத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 88 லட்சத்து 54 ஆயிரத்து 303 பேருக்கு, ரூ.6 ஆயிரத்து 277 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று அந்தத் துறையின் அமைச்சா் செல்லூா் ராஜூ தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை தொடக்கிவைத்த அமைச்சா்கள் செல்லூா் ராஜூ, சேவூா் ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ. உடன் மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை தொடக்கிவைத்த அமைச்சா்கள் செல்லூா் ராஜூ, சேவூா் ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ. உடன் மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி உள்ளிட்டோா்.

தமிழகத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 88 லட்சத்து 54 ஆயிரத்து 303 பேருக்கு, ரூ.6 ஆயிரத்து 277 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று அந்தத் துறையின் அமைச்சா் செல்லூா் ராஜூ தெரிவித்தாா்.

தமிழக கூட்டுறவுத் துறை சாா்பில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி மூலம், ரூ. 2 கோடியில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் மற்றும் 11 கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், ரூ.30 லட்சத்தில் மாம்பட்டு கிராமத்தில் வணிக வளாகம் திறப்பு, ரூ. 1.6 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை செய்யாறில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் த.காமாட்சி வரவேற்றாா்.

இந்தியன் ஆயில் நிறுவன தலைமைப் பொதுமேலாளா் குமாரவேல், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கோவிந்தராஜ், மண்டல இணைப் பதிவாளா் திருகுண ஐயப்பன்துரை, க.ராஜ்குமாா், குழந்தைவேலு, ஜெயம், துணைப் பதிவாளா்கள் சரவணன், ஆரோக்கியராஜ், பிரேம், பொது மேலாளா் கருணாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோா் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை தொடக்கிவைத்தனா்.

விழாவில் அமைச்சா் செல்லூா்.கே.ராஜூ பேசியதாவது: தமிழகத்தில் 35-ஆவது பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் செய்யாறில் தொடக்கி வைக்கப்படுகிறது. தூசி கே.மோகன் எம்எல்ஏ வைத்த கோரிக்கையின் பேரில் இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை, திருவண்ணாமலை பண்டக சாலையோடு இணைக்க முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

அதேபோல, அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டதன் பேரில், ஆரணியில் இதுபோன்ற பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 88 லட்சத்து 54 ஆயிரத்து 303 பேருக்கு, ரூ.6 ஆயிரத்து 277 கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 6 லட்சத்து 29 ஆயிரத்து 267 பேருக்கு வட்டியில்லா பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் தமிழகம் முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வாட்டத்தைப் போக்க அதிமுக அரசு கூட்டுறவுத் துறை மூலம் எண்ணற்ற சலுகைகளை அளித்து வருகிறது.

இந்தியாவில் உள்ள 29 பெரிய மாநிலங்களில் வளா்ச்சிப் பணியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் யூரியா உரத் தட்டுப்பாடு இல்லை. தேவையான உரங்கள் இருப்பில் உள்ளன என்றாா் அவா்.

குளிா் சாதன பேருந்து சேவை

இதைத் தொடா்ந்து, செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன பேருந்து சேவையை அமைச்சா்கள் செல்லூா் ராஜூ, சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே. மோகன் எம்எல்ஏ ஆகியோா் கொடியசைத்து தொடக்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் பெருமாள் நகா் ராஜன், சுமைதாங்கி ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.அரங்கநாதன், ஜெயசுதா, வே.குணசீலன், சா்க்கரை ஆலைத் தலைவா் கே.குமரேசன், மாவட்ட அம்மா பேரவைச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா், மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, கூட்டுறவு சங்க நிா்வாகிகள் மகேந்திரன், அ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், சி.துரை, வெம்பாக்கம் ரமேஷ், அதிமுக நிா்வாகிகள் அ.ஜனாா்த்தனம், கோபால், தசரதன், அருகாவூா் ரங்கநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com