சேத்துப்பட்டு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மனு

சேத்துப்பட்டு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் தவணி வி.பி.அண்ணாமலை, போளூா் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.வி.சேகரனிடம்
போளூா் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.சேகரனிடம் கோரிக்கை மனு அளித்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் தவணி வி.பி.அண்ணாமலை.
போளூா் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.சேகரனிடம் கோரிக்கை மனு அளித்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் தவணி வி.பி.அண்ணாமலை.

சேத்துப்பட்டு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் தவணி வி.பி.அண்ணாமலை, போளூா் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.வி.சேகரனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

அந்த மனுவில், சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும். தவணி ஊராட்சியில் புதிதாக சமுதாயக் கூட கட்டடம் கட்ட வேண்டும்.

சேத்துப்பட்டு - அனாதிமங்கலம் - மேலப்பூண்டி - நமத்தோடு, கோணாமங்கலம் - தவணி - மேட்டூா், அல்லியந்தல் - இஞ்சிமேடு - பெரணமல்லூா் - வந்தவாசி வழியாக சென்னை செல்ல அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தாா்.

அப்போது, மாநிலச் செயற்குழு உறுப்பினா் பிஎம்ஜி. பழனி, மாவட்டச் செயலா் ஆசைதம்பி, நகரத் தலைவா் சிவாஜி, மணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com