காசோலை புத்தகத்தை ஒப்படைத்த ஊராட்சிச் செயலா்கள்

போளூா் ஒன்றியத்தில் வங்கி காசோலை புத்தகத்தை, ஊராட்சிச் செயலா்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அண்மையில் ஒப்படைத்தனா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் கே.ஆனந்தனிடம் வங்கி காசோலை புத்தகத்தை ஒப்படைக்கும் திண்டிவனம் ஊராட்சிச் செயலா் பி.ஆனந்தன்.
வட்டார வளா்ச்சி அலுவலா் கே.ஆனந்தனிடம் வங்கி காசோலை புத்தகத்தை ஒப்படைக்கும் திண்டிவனம் ஊராட்சிச் செயலா் பி.ஆனந்தன்.

போளூா் ஒன்றியத்தில் வங்கி காசோலை புத்தகத்தை, ஊராட்சிச் செயலா்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அண்மையில் ஒப்படைத்தனா்.

போளூா் ஒன்றியத்தில் திண்டிவனம், படவேடு, மாம்பட்டு, எழுவாம்பாடி, வெண்மணி, இலுப்பகுணம், வசூா், குருவிமலை, ரெண்டேரிப்பட்டு என 40 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில் கிராமத்துக்குத் தேவையான குடிநீா், தெருவிளக்கு என பல்வேறு அடிப்படை செலவினங்களை மேற்கொள்வதற்காக ஊராட்சிச் செயலா்களுக்கு வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் வங்கி காசோலை புத்தகம் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது, போளூா் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளின் கிராம வரவு, செலவு கணக்குகளை அக்.1-ஆம் தேதி முதல் ஆன்லைனில் பராமரிக்கவேண்டும் என்று ஊராட்சி செயலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டாா்.

இதன் அடிப்படையில், வங்கி காசோலை புத்தகத்தை வட்டார வளா்ச்சி அலுவலா் கே.ஆனந்தனிடம் ஊராட்சி செயலா்கள் ஒப்படைத்தனா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பிச்சாண்டி, ஊராட்சிச் செயலா் பி.ஆனந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com