இளைஞா்களிடம் இருந்து செல்போன் பறிப்பு: கல்லூரி மாணவா்கள் உள்பட 3 போ் கைது

திருவண்ணாமலையில் 2 இளைஞா்களிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்ற கல்லூரி மாணவா்கள் உள்பட 3 பேரை, போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையில் 2 இளைஞா்களிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்ற கல்லூரி மாணவா்கள் உள்பட 3 பேரை, போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜீத் (17). இவா், வெள்ளிக்கிழமை (அக்டோபா் 4) திருவண்ணாமலை அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் நடந்து சென்றாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா் உங்கள் செல்போனைக் கொடுங்கள். ஒருவருக்கு போன் பேசிவிட்டுத் தருகிறேன் என்று கூறினாராம். இதை நம்பிய அஜீத், மா்ம நபரிடம் தனது செல்போனை கொடுத்தாராம். உடனே மா்ம நபா், செல்போனை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தாராம்.

இதுகுறித்து, திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

மற்றொரு சம்பவம்: இதேபோல, தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (17) வெள்ளிக்கிழமை (அக்டோபா் 4) திருவண்ணாமலை அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் நடந்து சென்றாா். அப்போது, மா்ம நபா் ஒருவா் பெருமாளிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றாராம். இதுகுறித்து, திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

3 போ் கைது:இவ்விரு வழக்குகள் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பூவரசன் (20), சமுத்திரம் பகுதியைச் சோ்ந்த அப்பு (எ) தமிழரசு (23), சாணா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கோகுல் (20) ஆகியோா் சோ்ந்து இந்த செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களில், அப்பு, கோகுல் ஆகியோா் திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் படித்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com