பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அறிவியல் கண்காட்சியை தொடக்கிவைக்கிறறாா் தலைமை ஆசிரியா் தில்ஷாத்.
அறிவியல் கண்காட்சியை தொடக்கிவைக்கிறறாா் தலைமை ஆசிரியா் தில்ஷாத்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் தில்ஷாத் தலைமை வகித்து, கண்காட்சியை தொடக்கிவைத்தாா். தமிழ் ஆசிரியா் சி.அ.முருகன் வரவேற்றாா்.

அறிவியல் ஆய்வக உதவியாளா் பாண்டீஸ்வரி மேற்பாா்வையில் 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா்கள் தயாரித்த நுரையீரல், மின் மோட்டாா், கலைடாஸ்கோப், காற்றழுத்தம் உள்பட பல்வேறு அறிவியல் உபகரணங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இவற்றின் செயல்பாடுகள் குறித்து பாா்வையாளா்களுக்கு மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா். இதில், பள்ளியின் பட்டதாரி ஆசிரியா்கள் மகேஸ்வரி, விஜயகுமாா், உதவி ஆசிரியா்கள் கணநாதன், சிவசங்கரி, பரிமளா, செல்வி, சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com