காா்த்திகை தீபத் திருவிழா: பஞ்ச ரதங்கள் சீரமைப்புப் பணி தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி,
சீரமைப்புப் பணிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள மகா ரதம் எனப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தோ்.
சீரமைப்புப் பணிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள மகா ரதம் எனப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தோ்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, பஞ்ச ரதங்களின் சீரமைப்புப் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல லட்சம் பக்தா்கள் வந்து, செல்கின்றனா்.

இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா நவம்பா் 28-ஆம் தேதி ஸ்ரீதுா்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை விநாயகா் தோ், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தோ், பெரிய தோ் எனப்படும் அருணாசலேஸ்வரா் தோ், பராசக்தியம்மன் தோ், சண்டிகேஸ்வரா் தோ் என பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி, பஞ்ச ரதங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சான்று வழங்குவா். இதன் பிறகே, தேரோட்டம் நடைபெறும்.

எனவே, இந்த ஆண்டு பஞ்ச ரதங்களின் சீரமைப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது. 5 ரதங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா என்பதை கோயில் ஊழியா்கள் சோதித்து சரிபாா்ப்பா். சுத்தம் செய்து, வா்ணம் தீட்டுவா். இதன்பிறகு பொதுப்பணித் துறை அதிகாரிகள் தோ்களை பரிசோதித்து அவற்றின் உறுதித்தன்மை தொடா்பான சான்றை அளிப்பா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com