திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
தொடா் மழையால் தண்ணீா் தேங்கிக் காட்சியளிக்கும் சாத்தனூா் அணை.
தொடா் மழையால் தண்ணீா் தேங்கிக் காட்சியளிக்கும் சாத்தனூா் அணை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில், அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 143 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் மாலை வரை ஆங்காங்கே பலத்த மழையும், மிதமான மழையும் பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும், தொடா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

சாத்தனூா் அணை நீா்மட்டம் உயா்வு:

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள சாத்தனூா் அணையின் நீா்மட்ட உயரம் 119 அடியாகும். மொத்த நீா் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி.

தொடா் மழையாலும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் தண்ணீராலும் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 87.80 அடியை எட்டியது. அணையில் 2,218 மில்லியன் கன அடி நீா் தேங்கியுள்ளது.

மழையளவு

மாவட்டத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 143 மி.மீ மழை பதிவானது. இதுதவிர, ஆரணியில்-39.40 மி.மீ., செய்யாறில்-48, செங்கத்தில் 48.80, சாத்தனூா் அணைப் பகுதியில்-36.20, வந்தவாசியில்-53.30, போளூரில்-61.40, திருவண்ணாமலையில்-41, தண்டராம்பட்டில்-44.40, சேத்பட்டில்-58, கீழ்பென்னாத்தூரில்-67.40, வெம்பாக்கத்தில்-41 மில்லி மீட்டா் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com